மின்சார கட்டணம் செலுத்திய சஜித்

Date:

சஜித் பிரேமதாச தலைமையிலான பௌத்த ஆலோசனைக் குழுவின் மூலம் இன்று (4) மின்கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில், சஜித் பிரேமதாசவை அரசியல்வாதியாக அல்ல, ஒரு பங்களிப்பாளராகக் கருதுகிறோம். இந்தச் சுமைகளையெல்லாம் அவர் தோள் மீது சுமந்துகொண்டு நாட்டிற்காகவும் உலகிற்காகவும் அவர் செய்த தியாகத்திற்காக அவரையும் சம்பந்தப்பட்ட அனைவரையும் வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாச இன்று (4) விடுத்துள்ள அறிவித்தலில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை புனிதத் தலத்தில் மின்வெட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது அரசாங்கத்தின் அதியுயர் கடமை. இவ்வேளையில், அந்த உயர் சட்டத்தை மீறுவதை நாங்கள் கண்டிக்கிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திபௌத்த ஆலோசனைக் குழுவுடன் இணைந்து, அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, தலைவரின் ஆலோசனையின்படி மிஹிந்தலை புனித பூமியை ஒளிரச் செய்யும் பணியில் ஈடுபட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்