யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அவர் குறித்த ஆலயத்தில் பணி புரிந்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் வழமையான அவருடைய நடமாட்டம் இல்லாத நிலையில், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.