தேசிய கீதத்தை சிதைத்து பாடிய சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக நாளை (3) அமைச்சில் ஆஜராகுமாறு பாடகி உமாரா சின்ஹவன்சவை விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புலனாய்வு குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிகழ்ச்சி முகாமையாளரிடம் இன்று (2) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் இசைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஒருவரும் நாளை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1