26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

குடும்பத்தில் 5வது நபரும் தற்கொலை!

எப்பாவல, சந்தரஸ்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காலியில் உள்ள தனது பணியிடத்திலிருந்து எப்பாவலவில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது வீட்டில் எவரும் தங்கியிருக்கவில்லை எனவும், நண்பகல் 12 மணியளவில் குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

காலி பிரதேசத்தை சேர்ந்த தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் முன்னதாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதன்படி குடும்பத்தில் ஐந்தாவது நபராக இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்த இளைஞனின் சகோதரியும் சகோதரனும் தலாவ பிரதேசத்தில் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்ட வீட்டின் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் மற்றுமொரு சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் அவரது மற்றொரு சகோதரர் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அதன்படி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏழு சகோதர, சகோதரிகளில் ஐந்து பேர் வெவ்வேறு காலப்பகுதியில் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?: பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பிரித்தானிய தமிழர் விடுதலை!

Pagetamil

Leave a Comment