மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முக்காடு அணிந்துகொண்டு விளையாடிய முதல் பெண் எனும் பெருமைக்குரியவர் மொரொக்கோ அணியின் நுஹைலா பென்சினா (Nouhaila Benzina).
நேற்று முன்தினம் (30) மொரொக்கோ அணிக்கும் தென் கொரிய அணிக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் மொரொக்கோ 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது.
அந்த ஆட்டத்தில் பென்சினா முக்காடு அணிந்தபடி விளையாடினார்.
“மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் அரபு நாடு என்பதில் பெருமிதம் கொள்கிறோம். நம்
மீது வைத்திருக்கும் நல்ல கருத்தைக் கட்டிக்காக்க வேண்டும்,” என மொரொக்கோ அணியின் முன்னணி வீராங்கனை கிஸ்லானை செப்பாக் தெரிவித்தார்.
மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் அரபு அல்லது வட ஆபிரிக்க அணி எனும் பெருமை மொரொக்கோவைச் சேரும்.




