காதலி வீட்டுக்கு சென்ற இளைஞன் கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

Date:

பதுளை, தல்தென, கன்வன்வ பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (31) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் பிரபாத் சஞ்சீவா என்ற 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் பதியத்தலாவ வீதி, மஹியங்கனை பிரதேசத்தில் வசிப்பவர்.

இந்த இளைஞன் நேற்று (30) தல்தென, 07 கன்வன்வ பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு வந்து அன்றிரவு அந்த வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

பின்னர், இரவு நேரத்தில் இளைஞன் வீட்டில் இல்லாததை அறிந்து அப்பகுதி மக்கள் தேடுதல் நடத்தினர்.

இன்று (31) மதியம் வீட்டின் கீழே ஓடும் கால்வாயில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்