யாழில் கைதான 23 வயது ‘இரவு ராணி’: பாலியல் நோய் தொற்றியுள்ளதா என பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு!

Date:

பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை தடுத்து வைத்து, பாலியல் தொற்றுநோய்களிற்கு உள்ளாகியுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை, சாரையடி பகுதியில் இன்று (31) அதிகாலை 1 மணியளவில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த இந்த இளம்பெண், பருத்தித்துறையில் நண்பியொருவருடன் தங்கியுள்ளார். அவர் சமூகப் பிறழ்வில் ஈடுபடுகிறார் என்ற முறைப்பாடு பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்து, இரண்டு முறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் சமூகப்பிறழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். முச்சக்கர வண்டியொன்றுடன் அவர் நின்றபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சாரதியும் அந்த இடத்தில் நின்றிருந்தார்.

ஏற்கெனவே திருமணமாகி 3 வயதில் அவருக்கு குழந்தையுள்ளது. அவர் தகாத நடத்தையில் ஈடுபடுகிறார் என கணவர் பிரிந்து சென்று விட்டார். பிள்ளை தற்போது மாமனாரின் பராமரிப்பில் இருப்பதாக கைதான பெண் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை எச்சரித்தும் திருந்தாமல் சமூகப்பிறழ்வில் ஈடுபட்டதால், அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்து, பாலியல் தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறாரா என பரிசோதிக்க வேண்டுமென பருத்தித்துறை பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்