75 வயது முதியவருடன் உல்லாசமாக இருந்து பணம் பறிக்க முயன்ற சீரியல் நடிகையும், நண்பரும் கைது!

Date:

75 வயது முதியவருடன் உல்லாசமாக இருந்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில், சீரியல் நடிகையும், முதியவரின் மருமனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், கேரள பல்கலைக்கழக ஊழியருமான 75 வயது முதியவர்,  தற்போது பட்டம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு பரவூர் களக்கோடு அருகே ஒரு வீடு மற்றும் பண்ணை வீடு உள்ளது.

இவை அனைத்தையும் விற்கும் பொறுப்பை அவர் தனது மருமகன் பினுவிடம் ஒப்படைத்துள்ளார். பினு நிலம் குறித்த தகவல்களை பலருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். இதை பார்த்த நித்யா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனக்கு அறிமுகமான பினுவை தொடர்பு கொண்டார்.

பினு நித்யாவை 75 வயது முதியவருக்கு அறிமுகப்படுத்தினார். அவரது சொத்துக்களை வாங்குவது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பலமுறை முதியவரை சந்தித்த நித்தியா, அவருடன் நெருங்கிப்பழக தொடங்கினார்.  நட்பு வலுத்ததால், வாடகைக்கு அந்த சொத்தை எடுக்க ஒப்புக்கொண்டார்.

நெருங்கிப் பழகுவதாக நித்தியா நாடகம் ஆடியதை அறியாத முதியவர் சபல புத்தியில் தன்னை மறந்தார். முதியவருடன் உல்லாசமாக இருக்கலாம் என நித்தியா கூறியதை நம்பி, கடந்த ஜூன் 6ஆம் திகதி களக்கோட்டிலுள்ள வீட்டிற்கு நித்தியாவை அழைத்து வந்துள்ளார்.

இருவரும் படுக்கையறையில் உல்லாசமாக இருந்தனர். அவர்கள் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்ததை ஜன்னல் வழியாக பினு மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்.

இது பினு, நித்தியா சேர்ந்து தீட்டிய திட்டப்படி நடந்தது.

திடீரென அறைக்குள் நுழைந்த பினு, வயதான பின் செய்யும் செயலா என தனது மாமனாரை திட்டியதுடன், இந்த வீடியோவை வெளியில் கசிய விடப்போவதாகவும், அதை மறைப்பதெனில் முதியவர் ரூ.15 இலட்சமும், நித்தியா ரூ.10 இலட்சமும் தனக்கு தர வேண்டுமென்றுள்ளார்.

இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள் என்பது முதியவருக்கு தெரிந்திருக்கவில்லை.

தன்னிடம் பணம் இல்லை என நித்யா அழுதுள்ளார். இதையடுத்து, பினுவிடம் கொடுப்பதற்காக 2 முறை நித்தியாவின் வங்கிக் கணக்கில் ரூ.11 இலட்சத்தை முதியவர் வைப்பிலிட்டுள்ளார்.

அவர் பணத்தை கொடுத்ததும், அவர் முன்னிலையில் வீடியோவை அழிப்பதாக குறிப்பிட்டு, பினு தன்னுடைய மொபைல் போனை தீ வைத்து எரித்துள்ளார்.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு பினு மீண்டும் ரூ.4 லட்சம் கேட்டுள்ளார். அழித்ததாக நம்பப்படும் காட்சிகளை அவர் வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவரிடம், பணத்தை கொடுத்து பிரச்சினையை தீர்த்து விடுங்கள் என நித்யாவும் வற்புறுத்தினார்.

இது இருவரும் சேர்ந்து ஆடிய நாடகமாக இருக்கலாம் என சந்தேகமடைந்த முதியவர், கடந்த ஜூலை 18ம் திகதி பரவூர் போலீசில் புகார் செய்தார்.

இதை அறியாத நித்யாவும், பினுவும் தொடர்ந்து முதியவரை போனில் தொடர்பு கொண்டனர். இதற்கிடையில், போலீசாரின் அறிவுறுத்தலின்படி, அவர் பணம் தருவதாக குறிப்பிட்டு, இருவரையும் பட்டத்தில் உள்ள தனது குடியிருப்புக்கு அழைத்தார். பரவூர் போலீஸார் புதன்கிழமை வந்த இருவரையும் கைது செய்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்