காங்கேசன்துறை- நாகபட்டினம் கப்பல் சேவைக்கு 6 மாதம் தேவை

Date:

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .மேலும் நாகப்பட்டினம் போன்ற சிறிய துறைமுகங்களை பராமரிக்கும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் எதிர்காலத்தில் இத்தொகையை பெறும்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்