தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கம் வென்றார்.
அத்துடன், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 25 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.
கருணாரத்ன 2 நிமிடம் 00.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
சீனாவின் ஜாங் ஜியான் 1998 ஆம் ஆண்டு 2:01.16 வினாடிகளில் பதிவு செய்த சாதனையை முறியடித்தார்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயாதிகா அபேரத்ன மூன்றாவது இடத்தைப் பிடித்தார.




