தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
10 பில்லியன் ரூபா செலவில் தனியார் மற்றும் அரச துறைகளின் கூட்டுத் திட்டமாக இந்தப் புதுமையான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தபால் அலுவலகம் ஒருபோதும் கலைக்கப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற “நிலையான நாட்டிற்கான ஒரு வழி” செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி லாபகரமான சூழ்நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டம் அஞ்சல் புத்தாக்கத்திற்கு இடையூறாக இருப்பதனால், அதனை விரைவில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் ஏற்கனவே 80 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாகவும் சாந்த பண்டார தெரிவித்தார்.




