26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
மலையகம்

ஊசி செலுத்தியதும் துடிதுடித்து பலியான யுவதி: காரணம் இதுவா?

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழந்ததை தொடர்ந்து, செஃப்ரியாக்ஸோன் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசியை வழங்குவதை நிறுத்துமாறு அமைச்சு அறிவிக்கவில்லை என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். .

இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தானது வைத்தியசாலையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்து எனவும், இதுவரை 2700 தடுப்பூசி குப்பிகள் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

சிகிச்சையின் போது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்ட யுவதிக்கு எவ்வித தாமதமும் இன்றி உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக முழு விசாரணை நடத்தியதாகவும் திலகரத்ன தெரிவித்தார்.

இந்நோயாளிக்கு வழங்கப்பட்ட அதே வகையைச் சேர்ந்த இந்த மருந்து இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், இம்மருந்தினால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்பது சந்தேகத்திற்கிடமாக இருப்பதாகவும், மிகவும் அரிதான ஒவ்வாமை அதிர்ச்சி (அனாபிலாக்டிக் அதிர்ச்சி) காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

நோயாளியின் மரணம் தொடர்பிலான தொடர் கண்காணிப்பில் இந்த நிலை காணப்படுவதாகவும் எனினும் பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலத்தின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட நிபுணத்துவ சட்ட வைத்தியர் பிரபாத் சேனசிங்க திறந்த தீர்ப்பை வழங்கியதுடன் இரத்தம், திசுக்கள் மற்றும் உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

நோயாளிக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியின் அளவை ஒரே நேரத்தில் வழங்கக்கூடிய ஊசிகள் இல்லாததால், அதற்குரிய டோஸ் இரண்டு முறை வழங்கப்பட்டதாகவும், அது நோயாளிக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் இயக்குனர் கூறினார்.

முதல் டோஸ் கொடுக்கும் போது, ​​நோயாளியின் கை வலித்தது, ஆனால் அலர்ஜிக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியின் போது அந்த அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடுமையான ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் யுவதி உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

விபத்தில் இரண்டாகிய தனியார் பேருந்து!

Pagetamil

Leave a Comment