உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளி அம்மன் கோயிலில் இன்று (14) காலை நுழைந்த திருடன் 25 இலட்சத்திற்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். .
பக்தர்களினால் காளியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளும், தங்கத்தால் செய்யப்பட்ட காளியின் பிற அலங்கார பொருட்களும் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி உண்டியலை உடைத்து ஏராளமான பணத்தையும் திருடிச் சென்றறுள்ளார்.
காளி கோயிலின் ஒருபுறம் உள்ள சிறிய வாயிலின் சாவியை உடைத்து முகத்தை மறைத்துக்கொண்டு திருடன் கோவிலுக்குள் நுழையும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடப்பு பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் கைரேகை பிரிவினர் மற்றும் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரின் பங்களிப்புடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




