24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சி பிரமுகர் வீட்டில் பட்டப்பகலில் திருடன் கைவரிசை (CCTV)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை (12) மாலை திருடன் கைவரிசை காட்டியுள்ளான்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது.

பிற்பகல் 4 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் சிறிய தொகைப் பணமும் இதன்போது திருடிச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா: பாடசாலைகளில் உணவு வழங்கல் திட்டத்தை இணைக்க பரிந்துரை

east tamil

அரிசி சந்தை விலையை தீர்மானிக்க கூட்டுறவின் பங்கு முக்கியம் – அகிலன் கதிர்காமர்

east tamil

வாளுடன் மாணவர் கைது

east tamil

இனி இரவில் அதிவேகமாக சென்றாலும் சிக்குவீர்கள்

Pagetamil

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

east tamil

Leave a Comment