24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

வடக்கு டெங்கு கட்டுப்பாட்டு பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சம்பள உயர்வை கோரியும் நிரந்தர நியமனத்தை அமுல்படுத்துமாறும் குறித்த கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறித்த கவனித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

ஏழு வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயை கட்டுப்படுத்தும் குறித்த பணியை தாம் மேற்கொண்ட போதும் தமக்கு இதுவரையும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான ஊதியம் 22,000 வரையே கொடுக்கப்படுகிறது எனவும் இதனைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளமையினால் உரிய அதிகாரிகள் தமது ஊதியம் தொடர்பான கோரிக்கையிணையும் நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையிணையும் நிறைவேற்ற வேண்டும் என இதன்போது கேட்டுக் கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா: பாடசாலைகளில் உணவு வழங்கல் திட்டத்தை இணைக்க பரிந்துரை

east tamil

அரிசி சந்தை விலையை தீர்மானிக்க கூட்டுறவின் பங்கு முக்கியம் – அகிலன் கதிர்காமர்

east tamil

வாளுடன் மாணவர் கைது

east tamil

இனி இரவில் அதிவேகமாக சென்றாலும் சிக்குவீர்கள்

Pagetamil

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

east tamil

Leave a Comment