24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

நடுக்கடலில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்: காயமடைந்த திருகோணமலை மீனவர் கரைக்கு வந்தார்!

நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு தென்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையின் பலநாள் மீன்பிடி கலன் ஒன்றின் மீது, இந்தோனேசிய பலநாள் கலனிலிருந்தவர்கள் நடத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதலில் தீக்காயமடைந்த கடற்தொழிலாளர் நேற்று இரவு இலங்கையின் டோரா கப்பலில் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 33 வயதுடையவரே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி, காயமடைந்தவர் உள்ளிட்ட குழுவினர், சசிந்த சுவா என்ற பல நாள் கலனில் கடலுக்குச் சென்று, ​​தென் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, ​​இந்தோனேஷியாவின் பல நாள் கலன் பெட்ரோல் குண்டுத் தாக்குதலை நடத்தியது. .

காயமடைந்தவர், நாட்டின் கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அந்தக் கப்பல் மூலம் தென் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடற்படையினர், காயமடைந்தவரை டோரா படகின் மூலம் நேற்று இரவு காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment