யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவில், சிறிசற்குணராஜா அதிக வாக்குகளை பெற்றார்.
புதிய துணைவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்புக்காக இன்று (12) விசேட பேரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
புதிய துணைவேந்தருக்காக தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, முகாமைத்துவ வணிக பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் வேல்நம்பி, பட்டப்படிப்புகள் பீட பேராசிரியர் எஸ்.கண்ணதாசன், கிழக்கு பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வினோபா, ஆகியோர் போட்டியிட்டனர்.
இன்றைய வாக்கெடுப்பில், முதல் 3 இடங்களை பேராசிரியர் சிறீசற்குணராஜா, பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் எஸ்.கண்ணதாசன் ஆகியோர் பெற்றனர்.
இந்த வாக்கெடுப்பு முடிவு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அதில் முதல் 3 இடங்களை பெற்றவர்களில் ஒருவரை ஜனாதிபதி துணைவேந்தராக தெரிவு செய்வார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1