வாள்வெட்டுக்கு பதிலடி துப்பாக்கிச்சூடு: மல்லாவியில் நடந்த பழிக்குப்பழி… இளைஞன் சுட்டுக்கொலை!

Date:

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இளைஞன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 23 வயதான இளைஞன் மீதே நாட்டு துவக்கு (இடியன்) கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது.

இதன் போது குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாலிநகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் 23 என்ற இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

இதேவேளை நேற்று இரவு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்திருந்த இருவரில் ஒருவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும் மற்றையவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் வீட்டில் பொலிசார் விசாரணையில் ஈடுபட்ட காட்சி

இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், வாள்வெட்டுக்கு இலக்கான தரப்பினர், பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவ இடத்திற்கு வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட தடயவியல் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதவான் உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிசாருக்கு பணித்தார்.

-ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்-

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்