நீருக்குள் சடலங்களை தேடும் பணி தீவிரம்!

Date:

மன்னம்பிடிய கொட்டலிய பாலத்தின் கீழே விழுந்த பேருந்து இன்று காலை மீட்கப்பட்டதுடன் மேலும் சடலங்கள் உள்ளதா என கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை, இராணுவம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் 16 வயதான ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் வசிப்பவர்கள்.

சாரதியின் பாதுகாப்பற்ற வாகன ஓட்டமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாதுகாப்பற்ற பாலமாக இருந்த இந்த பாலத்தில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்