Pagetamil
இலங்கை

மன்னாரிலிருந்து ‘அதுல்யா’ இழுத்துச் செல்லப்படவிருக்கிறது!

பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் (7) மாலை கரை தட்டிய இழுவைக் கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று நேற்று (8) மாலை 4 மணியளவில் பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.

மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை கரை தட்டியது.

இதன் போது குறித்த கப்பலில் 11 பணியாளர்கள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களில் இந்தியர்கள், இந்தோனேசியர்கள் அடங்குகிறார்கள்.

அதுல்யா என்ற பெயரிடப்பட்ட 87 மீற்றர் நீளம் கொண்ட பாஜ், அவத் என்ற பெயரிடப்பட்ட இழுவைப்படகு ஆகியனவே கரையொதுங்கின. இழுவைப்படகின் இயந்திரத்தில் மீனவர்களின் வலை சிக்கியதாலேயே இழுவைப்படகு கரையொதுங்கியது.

குறித்த விடயம் குறித்து இந்தியாவின் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும், கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைவாக குறித்த நிறுவனமும் கடற்படையும், சமுத்திரவியல் சேவை மற்றும் மீட்புப் பணியகம் ஆகியவை இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை கொண்டு சென்ற பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி மீண்டும் கப்பல் ஒன்றின் மூலம் இந்தியாவை நோக்கி கொண்டு சென்ற போதே இலங்கை கடற்பரப்பில் கரை தட்டியது.

கொள்கலனை இழுத்துச் செல்வதற்காக மற்றொரு இந்திய இழுவைக்கப்பல் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் பேசாலை நடுக்குடா பகுதியை வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி மற்றும் மீட்டுச் செல்ல வந்த கப்பல் ஆகியவற்றை பார்வையிட மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

நீரில் மூழ்கி சிறுவன் பலி

east tamil

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

east tamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

அழிவடைந்ததாக கருதப்பட்ட வௌவால் இனம் 58 ஆண்டுகளின் பின் இலங்கையில் கண்டுபிடிப்பு!

Pagetamil

Leave a Comment