26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
உலகம்

கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் துருக்கியில் தங்க வைக்கப்பட்டிருந்த 5 தளபதிகள் ஜெலன்ஸ்கியுடன் நாடு திரும்பியதால் சர்ச்சை!

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, துருக்கியிலிருந்து நாடு திரும்பியபோது, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 5 உக்ரைனிய இராணுவ தளபதிகளை சொந்த நாட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த நடவடிக்கை, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக ரஷ்யா குற்றம்சுமத்தியுள்ளது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சனிக்கிழமையன்று, அந்த 5 பேரையும் துருக்கியில் வைத்திருப்பதாக பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி உறுதியளித்ததாகவும், இந்த நடவடிக்கை குறித்து ரஷ்யாவிற்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் போரில் மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியபோது அந்நகருக்கு தலைமை தாங்கிய உக்ரைன்ன் இராணுவ தளபதிகள் 5 பேரே இவ்வாறு உக்ரைனுக்கு திரும்பி வந்துள்ளனர்.

மரியுபோல் நடவடிக்கையில் உக்ரைன் படைகள் பல மாதங்களாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. கிட்டத்தட்ட மூன்று மாத முற்றுகையின் பின்னரே ரஷ்யா அந்த நகரை கைப்பற்றியது.

உலகின் மிகப்பெரிய எஃகு ஆலைகளை கொண்டுள்ள மரியுபோலில்தான் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையுள்ளது. அதன் நிலக்கீழ் சுரங்கங்களில் தங்கி இருந்தும் உக்ரைன் படைகள், ரஷ்யாவுடன் சண்டையினர். இந்த சூழலில்தான் அவர்களை கடந்த ஆண்டு மே மாதம் சரணடையுமாறு உக்ரைன் கேட்டுக் கொண்டது. அதன்படி தளபதிகளும் சரணடைந்தனர். கிட்டத்தட்ட 3000 வரையான உக்ரைன் படைகள் இதன்போது சரணடைந்தனர்.

தளபதிகள் விடுவிப்பு தொடர்பான மத்தியஸ்ததில் துருக்கி ஈடுபட்டது. போர் முடிவடையும் வரை தளபதிகள் துருக்கியில் இருக்க வேண்டும் என்ற மத்தியஸ்தம் விதிமுறைகளின் கீழ் தளபதிகளில் சிலரை கைதிகள் பரிமாற்றத்திற்கு ரஷ்யா ஒப்புக் கொண்டு செப்டம்பர் மாதம் விடுவித்தது. விடுவிக்கப்பட்டவர்கள் துருக்கியில் தங்கி இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெலன்ஸ்கி தனது துருக்கி பயணத்தில் , அங்கு தங்கியிருந்த தளபதிகள் 5 பேரை நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, “நாங்கள் துருக்கியிலிருந்து தாயகம் திரும்பி விட்டோம்.. நமது நாயகர்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளர். அவர்களது குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கைதிகள் பரிமாற்ற விதிமுறையை துருக்கி மீறியதாகவும் இதுகுறித்து முதலில் எங்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

மியன்மாரில் நிலநடுக்கம்

east tamil

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

east tamil

18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

east tamil

Leave a Comment