யாழ்ப்பாணத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரை மாய்த்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
சிவஞானம் (70) என்பவரே உயிரிழந்தார்.
கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள அடைப்பந்தாழி வைரவர் கோயில் கிணற்றில் இன்று சடலமாக அவர் மீட்கப்பட்டார். கிணறு வலையால் மூடப்பட்டுள்ளது. நீர் அள்ளுவதற்கு சிறிய துவாரமுள்ளது. அதன் ஊடாக அவர் கிணற்றுக்குள் குதித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அவரது மனைவி 23 நாட்களின் முன்னர் காலமாகியிருந்தார்.
மனைவி உயிரிழந்த சோகத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாமென நம்பப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1