வரணி பகுதியில் நேற்றிரவு நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் சுட்டிபுரம் அம்மன் கோயிலிடியில் இரவு 10.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வடமராட்சி, தேவரையாளி பகுதியை சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (28) என்பவரே உயிரிழந்தார்.
வடமராட்சியிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனமொன்றின் பணியாளரான அவர், பளை பகுதியில் கட்டுமான பணி தொடர்பாக சென்றுவிட்டு திரும்பி செல்லும் போதே விபத்திற்குள்ளானார்.
அவர் அண்மையில்தான் திருமணமானவர் என குறிப்பிடப்படுகிறது.




