இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கப்டன் சாமரி அத்தப்பத்து, ஐசிசி மளிர் ஒருநாள் துடுப்பாட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம், ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கையின் முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்டமிழக்காமல் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறினார்.
அத்தபத்து ஆறு இடங்கள் முன்னேறி, தரவரிசையில் முதலிடத்திலிருந்த அவுஸ்திரேலியாவின் பெத் மூனியை பின்னுக்கு தள்ளி முதலித்தை பிடித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் இலங்கை வென்றது. 2வது போட்டியில் டக் அவுட்டானார். இதில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3வது போட்டியில் வெறும் 80 பந்துகளில் 140 ரன்களை விளாசி, அணியை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் நியூசிலாந்தில் முதல்முறையாக இலங்கை தொடரை வென்றது.
இடது கை துடுப்பாட்ட வீராங்கனையான சாமரி அத்தப்பத்து, ஒருநாள் போட்டிகளில் இதுவரை 8 சதங்கள், 15 அரை சதங்கள் அடித்துள்ளார்.
அத்தப்பம்து 7வது இடத்திலிருந்து, முதலிடத்திற்கு முன்னேற, மூனி, லாரா வோல்வார்ட், நாட் ஸ்கிவர்-பிரண்ட், மெக் லானிங், ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தலா ஒரு இடம் சரிந்தனர்.
இலங்கையின் சனத் ஜயசூரிய ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வரிசையில் முதலிடம் பிடித்த ஒரே இலங்கை வீரர். மகளிர் தரப்பில் இப்போது சாமரி அத்தப்பத்துவும் இப்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இருவரும் இடதுகை ஆட்டக்காரர்கள்.