வடக்கில் 6 மாதங்களில் 1843 டெங்கு நோயாளர்கள்!

Date:

வடக்கு மாகாணத்தில் கடந்த 6 மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 6 மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள். இதுவரையில் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு தாக்கத்தினால் இறப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்.

இது தவிர வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 1491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக 1843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

வடக்கு மாகாணத்தின் ஏனைய மாகாணங்களை ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. யாழ்ப்பாண நகர்ப்பகுதி, நல்லூர், கரவெட்டி பகுதிகளில் டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது

இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. ஏனைய நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெங்குத் தொற்றை குறைப்பதற்கு குறிப்பாக டெங்கு பரப்பும் நுளம்புகளை இல்லாது ஒழிக்க வேண்டும். அந்த நுளம்புகள் குறிப்பாக பல்வேறு இடங்களில் பெருகி டெங்கு நோயைப் பரப்புவதனால் டெங்கு நோய் தாக்கமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் ஏற்படுகின்றது.

எனவே டெங்கு தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்