25.4 C
Jaffna
January 1, 2025
Pagetamil
ஆன்மிகம்

செல்வச்சந்நிதி முருகன் ஆலய ஆனி மாத கண்ணகை அம்மன் குளிர்த்தி பொங்கல்

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் நேற்றைய தினம் திங்கட்கிழமை (3) நடு நிசி அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றது.

இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு கடைசி பௌர்ணமி திங்கட்கிழமை நடுநிசி இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள், பெருங் கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்து விசேட பூஜை வழிபாடுகள் நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை வரையான ஒரு வார காலத்திற்கு கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம்பெற்றது.

ஏற்றப்பட்ட தீபமானது பொங்கல் நிறைவடைந்த பின் தானாக அணைந்து விடும். சந்நிதியில் பொங்கல் வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொங்கலாகும்.

இதன் போது கண்ணகை அம்மன் வழக்குரை மற்றும் காவியம் எனும் புத்தகங்கள் நடுநிசியில் படித்து, அதனைத் தொடர்ந்து எட்டாம் நாள் அம்மனுக்கான குளிர்த்தி கதை பாடி பொங்கல் நிறைவு பெற்றது.

இதன்போது பெருமளவான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கண்ணகி அம்மனுக்காக பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

காலாதிகாலமாக தொன்றுதொட்டு இட்ம்பெறும் குறித்த நிகழ்வு மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment