25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

‘ஒரு மரத்தை வெட்டுவது 12 பேரை கொல்வதற்கு சமம்’: யுனிசெப் மாநாட்டில் 12 வயது சம்மாந்துறை சிறுமி உரை!

ஓர் அடர்த்த மரமானது 12 பேர் சுவாசித்து உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. அதனை வெட்டினால் 12 பேரைக் கொலை செய்வதனைப் போலுள்ளதாக உணரவில்லையா ? என்று 12 வயது சிறுமியாகிய நான் உலகத்தாரிடம் கேட்கிறேன் என்றும் 2015 ல் பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இன்று வரையும் கையெழுத்திடாத உலக நாடுகளின் தலைவர்கள் இவ் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இணைந்து கொள்ளுங்கள் என பகிரங்க அழைப்பினை விடுகிறேன் என்று நேற்று (28.06.2023) கொழும்பில் இடம்பெற்ற யுனிசெப் சர்வதேச அமைப்பின் Bussiness Council அங்குராப்பண நிகழ்வில் சிறப்பு உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்ட 12 வயது சிறுமி மின்மினி மின்ஹா சர்வதேச தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய அவர், நான் இச்சபையினோர் முன்னிலையில் ஓர் வேண்டுகோளை சர்வதேசத்துக்கு விடுக்கிறேன். இவ் ஒப்பந்தத்தில் 12. டிசம்பர். 2015 இல் 55 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. பாரிஸ் உடன்படிக்கை 2016 – நவம்பர் -4ம் திகதி அமுலுக்கு வந்தது. அதில் இலங்கை 2016 – ஏப்ரல்- 22 ம் திகதி கைச்சாத்திட்டு விட்டது.

அதாவது உலகளவில் வெப்பம் அதிகரிப்பினை தடுப்பதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 2015 ம் ஆண்டு மேற்க்கொள்ளப்பட்டது. இந்நூற்றாண்டின் முடிவில் வெப்பநிலை அதிகரிப்பை 02 டிக்கிரி செல்சியஸ்ஸால் குறைத்தல் அல்லாது போனால் 1.5 டிக்கிரி செல்சியஸினாலாவது இந்த வெப்பநிலையைக் குறைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது என்றார்.

யுனிசெப் பிசினஸ் கவுன்சில் மாநாடானது யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கொக் தலைமையில் இடம்பெற்றது.

மின்மினி மின்ஹா சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் தரம் 7ல் கல்வி கற்று வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக் கழிவை உடனடியாக தடுக்க தவறின் சட்ட நடவடிக்கை – கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி

Pagetamil

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

Pagetamil

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் – மீனவர்கள் எதிர்ப்பு

east tamil

Leave a Comment