‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா…’: வடிவேலு குரலில் ஈர்க்கும் மாமன்னன் மேக்கிங் வீடியோ

Date:

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படம் வியாழக்கிழமை (29) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

கறுப்பு வெள்ளையில் இருக்கும் இந்த வீடியோவின் பின்னணியில் மெலிசான வடிவேலுவின் குரல் மட்டும் பாடலாக ஒலிக்கிறது. ‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா…’ என்ற எவர்கிரீன் ஹிட் பாடலை எந்த இசைக் கலப்பும் இல்லாமல் அவர் பாடும்போது படப்பிடிப்பு தளக் காட்சிகள் வந்து செல்கின்றன. ஒருவித மென்சோகம் கலந்த வடிவேலுவின் குரலில் முன்நகரும் காட்சிகள் ஈர்க்கின்றன. இந்த வீடியோ படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் நடந்தது என்ன?: போட்டுடைத்தார் பான்கிராஃப்ட்

வெஸ்ட் அவுஸ்திரேலியன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான சாட்சியத்தில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான...

அம்பாறையில் திடீர் கடல் கொந்தளிப்பு-பெரியநீலாவணை முதல் அக்கரைப்பற்று வரை கடற்கரை வீதியைத் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கடல் நீர்

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை இஸ்லாமபாத், கடற்கரைப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு,...

நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் அணியிடம் இஸ்ரேல் சபாநாயகர் பதவி

இஸ்ரேலிய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமையன்று புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நபர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்