உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் இன்று நடந்த ஆட்டத்தில் ஓமான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் ஒக்டோபர் முதல் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கான அணிகள், தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.
இந்நிலையில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் சிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
சிம்பாவேயின் புலவாயோ குயின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை- ஓமான் அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 30.2 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது..
அயான் கான் 41, ஜிட்ரேன்டர் சிங் 21 ஓட்டங்களை பெற்றனர். உதிரிகள் 14 ஓட்டங்கள்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். லஹிரு குமார 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலளித்து ஆடிய இலங்கை 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை பெற்று, 10 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
திமுத் கருணாரட்ன 61, பதும் நிசங்க 37 ஓட்டங்களை பெற்றனர்.
ஆட்டநாயகன் வனிந்து ஹசரங்க.