விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் இடம்பெறுள்ள ‘நான் ரெடி’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இந்தப் பாடல் விஜய் பிறந்த நாளையொட்டி ஜூன் 22ஆம் திகதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் விஜய் நடிக்கும் போர்ஷன் முடிவடையும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வரும் ஜூன் 22ஆம் திகதி படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
“நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா..” என தொடங்கும் பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து அனிருத் அசால் கோலாரும் பாடியுள்ளனர். இந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். துள்ளலான பாடலாக உருவாகியுள்ள இப்பாடல், விஜய்யின் இன்ட்ரோ பாடலாக இருக்கும் என தெரிகிறது.