Pagetamil
இலங்கை

சாவகச்சேரி மக்களுக்கு சோழ ராஜ்ஜிய குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு!

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று குறித்த பகுதிக்கு சென்று நிலமைகளை நேரடியாக அமைச்சர், இன்று(20.06.2023) சம்மந்தப்பட் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறித்த கிணறு சோழர்களினால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான தீர்த்தக் கிணறு என்பது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டமையினால் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சருடனான சந்திப்பின் போது, குறித்த கிணற்றின் கட்டுமானங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்(யாழ்ப்பாணம்) பந்துல ஜீவ, புனர்நிர்மாணப் பொறுப்பதிகாரி ராகினி மற்றும் மேலாய்வு உத்தியோகஸ்தர் தஷிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“கல்முனையில் சமய தீவிரவாதம்” எனும் குற்றச்சாட்டு தொடர்பில் மக்களுக்கான அறிவித்தல்

Pagetamil

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

Leave a Comment