27 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இந்தியா

‘என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை!’: கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் ஸ்டாலின்

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்துவைத்தார். உடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அமைச்சர் துரைமுருகன், எம்.பிக்கள் கனிமொழி, சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.

முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்துவைப்பதாக இருந்தது.

அதற்கான திறப்பு கல்வெட்டும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நிதிஷ் குமாரின் வருகை ரத்தானது. அதனால், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏலக்காய் மாலை அணிவித்து, சிறிய தேர் ஒன்றைப் பரிசளித்தார்.

கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘வான்புகழ் வள்ளுவருக்கு கோட்டம் கண்ட தலைவருக்கு திருவாரூரில் கோட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை. கருணாநிதி நலிவுற்றபோது நானும், சகோதரியும் இந்த நிலத்தை வாங்கினோம். இதில்தான் தற்போது, தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்தக் கோட்டம் கட்டப்பட்டிருக்கிறது.

கோட்டத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கினார் எ.வ.வேலு. இது அமைய காரணமான அனைவருக்கும் நன்றிகள். பிறந்த ஊரான திருக்குவளையைக் காதலித்தவர் கலைஞர். அவர் எத்தனை தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும் இறுதியாக வந்தது திருவாரூருக்குத்தான்.

திராவிட மாடல் ஆட்சியை கலைஞருக்கு காணிக்கையாக நடத்திக் கொண்டிருக்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார் நிதிஷ்குமார். இந்திய அரசியலில் ஆளுமையாக இருந்தவர் கலைஞர்.

ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ. அதை அணைக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.கவை ஆள அனுமதிப்பது, அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கேடு. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம், நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment