ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் இளவரசர் சைட் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தின் போது வீதியை மறித்து போராடிய வழக்கில் ஆஜராகாத பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, வீதிகளை மறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் விமல் வீரவன்ச பொதுமக்களைளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான வீரகுமார திஸாநாயக்கவும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. எனினு அவர் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.




