கொக்காவெவ பிரதேசத்தில் உள்ள வழிபாட்டிடமொன்றுக்கு தனது தாயாருடன் வந்த சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் மந்திரவாதி ஒருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்காவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுத் திபுல்வெவ பிரதேசத்தில் வழிபாட்டிடம் நடத்தி வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் அமானுஷ்ய சக்தியினால் தாக்கப்பட்டதாக குடும்பத்தினர் நம்பினார்கள். இதையடுத்து, இந்த வழிபாட்டிடத்துக்கு வந்து மந்திரவாதியை சென்று சந்தித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியையும் தாயையும் வழிபாட்டிடத்துக்கு வரவழைத்து சடங்கு செய்து கொண்டிருந்த போது, சிறுமியை தாக்கிய அமானுஷ்ய சக்திகளை அகற்ற தேவையான பணிகளை தயார் செய்துமாறு உதவியாளர்களிடம் கூறிவிட்டு, தாயாரை வெளியே செல்லுமாறு மந்திரவாதி கூறியதாக போலீசார் கூறுகின்றனர்.
பின்னர், மந்திரவாதி கலை வந்தவர் போல ஆடி, ‘கடவுள் வந்துவிட்டார்’ எனக் கூறி, சிறுமியின் ஆடைகளை கழற்றச் சொன்னதாகவும், அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ‘கடவுள் வந்துவிட்டார்’ என கூறியபடி சிறுமியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் செய்தார்
சிறுமி வீட்டுக்குச் சென்று இதுபற்றி தனது தாயிடம் கூறியதையடுத்து, தாய் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்கவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கொக்காவெவ பொலிஸ் நிலைய பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேக நபரான மந்திரவாதியை கைது செய்தனர்.