வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர்.
வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத்தில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் சிகிச்சைக்கு பிநதிய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.
ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1