கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உப பொருட்கள், உதிரிப்பாகங்களின் விலைகள் சுமார் 20 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
ரூபாய் மதிப்பு உயர்வின் பலனை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சங்க உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.
டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது விலைகளை அதிகரித்ததால், தற்போது விலைகளை குறைப்பதற்கு தயங்கவில்லை என சமித் செனரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.



