அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதாக, குற்றப்பத்திரிகையை எதிர்கொள்கிறேன் என்று தனது Truth சமூக தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
“செவ்வாயன்று மியாமியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்று டிரம்ப் பதிவில் எழுதினார்.
“அமெரிக்காவின் முன்னாள் அதிபருக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம், ஆபாச பட நடிகைக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, ட்ரம்ப் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
வியாழக்கிழமை புதிய குற்றப்பத்திரத்தை தொடரந்து ட்ரம்ப் வெளியிடப்பட்ட வீடியோவில் “நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவி மனிதன்” என்றார்.
புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் மார்-ஏ-லாகோ தோட்டத்தில் எஃப்பிஐ நடத்திய சோதனையை தொடர்ந்து, இரகசிய ஆவணங்களின் பெட்டிகள் மீட்கப்பட்டன.
அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், முன்னாள் ஜனாதிபதி விசாரணையுடன் தொடர்புடைய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக செய்தி வெளியிட்டுள்ளன.
“நம் நாடு நரகத்திற்குப் போகிறது. அவர்கள் டொனால்ட் ட்ரம்பிற்குப் பிறகு வருகிறார்கள், நீதித்துறையை ஆயுதமாக்குகிறார்கள், எஃப்பிஐயை ஆயுதமாக்குகிறார்கள், ”என்று டிரம்ப் வீடியோவில் கூறினார்,.
2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ட்ரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது நற்பெயரை அழிக்க இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ட்ரம்ப் ஜனவரி 2022 இல் பதவியை விட்டு வெளியேறத் தயாரானபோது, தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து பல பெட்டிகளில் இரகசியத் தகவல்களை சேகரித்து எடுத்துக் கொண்டு சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் அவரது பண்ணை வீட்டில் எஃப்பிஐ சேதனை மேற்கெண்டு 33 பெட்டிகளில் கிட்டத்தட்ட 11,000 ஆவணங்களை மீட்டன.
ஓகஸ்ட் திகதியிட்ட FBI பிரமாணப் பத்திரம், “அங்கீகரிக்கப்படாத இடங்களில் வகைப்படுத்தப்பட்ட தகவல்களை முறையற்ற முறையில் அகற்றுதல் மற்றும் சேமித்தல், அத்துடன் சட்டவிரோதமாக மறைத்தல் அல்லது அரசாங்கப் பதிவுகளை அகற்றுதல்” பற்றிய குற்றவியல் விசாரணையை விவரிக்கிறது.