தமன்னாவுக்கு ரஜினி பரிசளித்த ஆன்மீகப் புத்தகம்!

Date:

“நடிகர் ரஜினிகாந்த் அவரே கையொப்பமிட்ட ஆன்மிக புத்தகம் ஒன்றை எனக்கு பரிசளித்தார். ஜெயிலர் படத்தின் மூலம் என் கனவு நனவானது” என்று நடிகர் தமன்னா பேசியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஜெயிலர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் ரஜினி.

படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்து பேசியுள்ள நடிகை தமன்னா, “ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவானது. ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தின் அத்தனை தருணங்களும் என் நினைவில் என்றென்றும் நீடித்திருக்கும். ரஜினி அவரே கையொப்பமிட்ட ஆன்மிக புத்தகம் ஒன்றை எனக்கு பரிசளித்தார். மிகவும் அர்த்தமுள்ள பரிசு அது” என தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர்’ வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...

அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்