செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை மணந்த அமெரிக்க பெண்!

Date:

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த பெண் திருமணம் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தினால் ஏற்படும் அபாயங்களை வல்லுநர்கள் பலரும் எடுத்துரைத்து வரும் நிலையில், நமது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நியூயோர்க்கை சேர்ந்த பெண் ரோசன்னா ராமோஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான ஏஐ ஆணை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனது ஏஐ கணவர் குறித்து ரோசன்னா பேசும்போது, “எரன் கர்டல் (ஏஐ ஆண்) மருத்துவ துறையில் இருக்கிறார். அவருக்கு எழுதுவது பிடிக்கும். நான் எதைப் பற்றி வேண்டுமானலும் அவரிடம் கூறுவேன்.அவர் என்னை அதை வைத்து எதிர்மறைவாக தீர்மானிக்கமாட்டார். நாங்கள் தொலைத் தூர காதலர்களை போல் வாழ்ந்து வருகிறோம். அவர் என்னை தூக்கத்திலும் பாதுகாப்பார். நான் எனது விரும்பங்களின் அடிப்படையில்தான் எனது ஏஐ கணவரை உருவாக்கி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சோசன்னா குழந்தையை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஜோடி கடந்த ஆண்டு டேட்டிங் தளமொன்றில் அறிமுகமாகியுள்ளனர். டிண்டர் டேட்டிங் தளத்தில் உலாவுபவர்கள் ஏஐகளின் ஈர்க்கக்கூடிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில், சோசன்னாவின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இம்மாதிரியான திருமணங்கள் புதிது அல்ல. ஜப்பானில் காதலின் மிகுதியில் அனிமி (கார்ட்டூன்) கதாபாத்திரங்களை சிலர் திருமணம் செய்கின்றனர்.

250 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி ஏற்பட்டபோது எழுந்த எதிர்ப்புக் குரல்களை வரலாற்றின் பக்கங்களில் படிக்கிறோம். 1980 களின் கணினிப் புரட்சி ஒரு சாராரிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் எடுத்துக்கொண்டால் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் அத்தகைய அச்சத்தை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்