டயலும நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் உள்ள காப்புக்காட்டில் கூடாரமொன்றில் முகாமிட்டிருந்த 23 வயதுடைய தாதிய மாணவி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மாணவியின் காதலனை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 வயதுடைய இளைஞன் வாரியபொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். அவரும் யானை தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இயற்கை ஆர்வலர்கள் என்று கூறப்படும் இந்த ஜோடி, நாடு சுற்றுவதை தங்களது பொழுதுபோக்காக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கொஸ்லந்த உடடியலும வனவிலங்கு காப்பகத்தில் அனுமதியின்றி பிரவேசித்து தம்பதிக்கு கூடாரம் அமைக்க உதவிய சுற்றுலா வழிகாட்டிகள் என கூறப்படும் இரு இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டுள்ளது.