அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கடமையின் போது மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஆவார். அவர் சனிக்கிழமை (3) கைது செய்யப்பட்டு பலபிட்டிய வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடமையில் ஈடுபட்டிருந்த போது மதுபானம் அருந்தியமை உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1