இலங்கை 6 விக்கெட்டுக்கு 323 (மெண்டிஸ் 78, கருணாரத்னே 52) ஆப்கானிஸ்தானை 191 (ஷாஹிடி 57, சத்ரன் 54, தனஞ்சய 3-39) 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 132 ஓட்டக்ளால் வீழ்த்திய இலங்கை தொடரை சமன் செய்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நடந்த இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி, 6 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்களை குவித்தது.
இலங்கையின் முன்வரிசை ஆட்டக்கார்கள் இன்றைய ஆட்டத்தில் பொறுப்புணர்ந்து ஆடியிருந்தனர். தொடக்க ஜோடி 15.5 ஓவர்களில் 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. பதும் நிசங்க 43 ஓட்டங்களுடன் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.
திமுத் கருணாரத்ன 53, குசல் மெண்டிஸ் 78, சதீர சமரவிக்ரம 44 ஓட்டங்களை பெற்றனர்.
பின் வரிசையில் தசுன் சானக 13 பந்தில் 23 ஓட்டங்களும், ஹசரங்க 12 பந்தில் 29 ஓட்டங்களும் குவித்தனர். இலங்கை கடைசி 10 ஓவர்களில் 109 ஓட்டங்களை குவித்தது.
50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 323 ஓட்டங்களை குவித்தது.
பதிலளித்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்களில் 191 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
இப்ராஹிம் சத்ரான் 54, கப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி 57 ஓட்டங்களை பெற்றனர்.
வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். துஷ்மந்த சமீர ல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆட்டநாயகன் தனஞ்ஜய டி சில்வா.
முதலாவது ஒருநாள் போட்டியில் ஆடிய மதீஷ பத்திரன, தசுன் ஹேமந்த ஆகியோர் இந்த ஆட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.