பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு திணைக்கள வளாகத்தில் உள்ள நாற்காலியில் இன்று காலை (04) சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
களனி, வேதமுல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய கருணாரத்ன ஆராச்சிகே தர்மசேன என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் துப்புரவு பிரிவில் பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.
அதே வளாகத்தின் மேல் தளத்தில் துப்புரவுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வசித்து வந்த இவர், இன்று (04) காலை நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர், தலங்கம மரண விசாரணை அதிகாரி பிரேமலதா அபேவர்தன சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.