கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்து ஏனைய பிரதிவாதிகளுக்கு எதிராக தொடர அனுமதியளித்து நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நேற்று (30) நீர்கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தினால். தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளான நிஷாந்த ஹப்புஆராச்சி மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விசாரணைகளை மேற்கொண்டது.
உயர் நீதிமன்ற சிவில் மேன்முறையீடு, நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நுவன் தாரக ஹீனடிகலவின் உத்தரவை உறுதிப்படுத்தியது, அவர் டிசம்பர் 15, 2022 திகதியிட்ட உத்தரவின்படி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில், இரண்டாவது பிரதிவாதியாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடப்பட்டிருந்தாலும், மற்ற பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரணையைத் தொடரலாம் என்று அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் ஷானிகா செவ்வந்தியுடன் தினிதி விஜயசேகர ஆஜராகியிருந்தார்.
சட்டமா அதிபர் தரப்பில் அரச சட்டத்தரணி தரங்க ரணசிங்கவுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திர பத்திரன ஆஜராகியிருந்தார்.