சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் அழகில் தான் மயங்கியுள்ளதாகவும், அவரை ஒரு தலையாக காதலித்து வருவதாகவும் பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவையா தெரிவித்துள்ளார்.
குல்ஷன் தேவையா சமீபத்தில் வழங்கிய ஒரு நேர்காணலின் போது, “சாய் பல்லவி மீது எனக்கு பெரிய ஈர்ப்பு உண்டு. நான் அவரை நீண்ட காலமாக காதலித்து வருகிறேன். சாய் பல்லவியின் போன் நம்பர் கூட என்னிடம் உள்ளது. ஆனால் அவர அருகில் சென்று அதைப் பற்றி அவரிடம் சொல்ல நான் ஒருபோதும் துணியவில்லை.
அவர் ஒரு அற்புதமான நடனக் கலைஞர், அற்புதமான நடிகை. அவர் எனக்கு ஒரு ஈர்ப்பு மட்டுமே. வேறொன்றும் இல்லை.
சில நேரங்களில் நான் அவரிடம் ஈர்க்கப்படுகிறேன். ஆனால் அவர் மிகவும் திறமையான நடிகை. ஒரு நாள் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்க அதுவே போதும். மற்றவை எனக்குத் தெரியாது.
எண்ணம் இருந்தால் அது நடக்கும். ஆனால் நல்ல நடிகையுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். அதில் தவறில்லை. குறைந்த பட்சம் அந்த அளவிலாவது அட்ஜஸ்ட் செய்வேன்“ என்றார்.