செவ்வாய்க்கிழமை (30ஆம் திகதி) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு வாரத்திற்கு வழங்கப்படும் 7 லீற்றர் பெற்றோல் 14 லீற்றராக அதிகரிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், பயணிகள் போக்குவரத்துக்காக பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கான வாரத்திற்கான 15 லீற்றர் எரிபொருளும் 22 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கான 8 லீற்றர் ஒதுக்கீடு 14 லீற்றராகவும், காருக்கான 30 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு 40 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பஸ்களுக்கான 60 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு 125 லீற்றராகவும், லொறிகளுக்கான 75 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு 125 லீற்றராகவும், ஏனைய வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.