Pagetamil
இலங்கை

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (29) ஆரம்பமாகி ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வதரக மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இருந்து தலா ஐந்து கைதிகளும் இதில் அடங்குவர்.

அவர்களின் பரீட்சை மையம் புதிய மகசின் சிறையில் அமைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை காலத்தில் “சிசு சரிய” பஸ் சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பாடசாலை விடுமுறையுடன் மாணவர் பேருந்து சேவையை நிறுத்துவது வழமையாக காணப்படுகின்ற போதிலும், சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ந்தும் பேருந்து சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நேற்று (28) அமுல்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

இன்று முதல் சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானாலும் உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை மதிப்பீட்டை ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil

சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி

east tamil

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

east tamil

பேர வாவி பறவைகள் உயிரிழப்புக்கு விசம் காரணம்?

Pagetamil

கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

east tamil

Leave a Comment