26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
மலையகம்

இரகசியமாக புகைபிடித்த O/L மாணவர்களால் விபரீதம்; ரூ.50 மில்லியன் பெறுமதியான நீர்க்குழாய்கள் நாசம்: 6 மாணவர்கள் கைது!

கேகாலை அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த குழாய்கள் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் மாவனல்லை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஓகஸ்ட் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அசுபினி எல்ல நீர் திட்டத்திற்கான நீர் குழாய்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அரநாயக்க உஸ்ஸாபிட்டிய பிரதேச சபை மைதானத்தில் அண்மையில் திடீரென தீ பரவியுள்ளது.

சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட இருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட 50 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்திருந்ததுடன் அவர்களில் ஐவர் இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் ஆறு பாடசாலை மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மைதானத்திற்கு அருகாமையில் உள்ள இரண்டு பாடசாலைகளில் தரம் 11 இல் இந்த மாணவர்கள் குழு கல்வி பயின்று வந்துள்ளனர்.

இந்த மாணவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு பெரிதும் அடிமையானவர்கள் எனவும், விளையாட்டு மைதானத்தை புகைபிடிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தியதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் தீப்பெட்டிகள் மற்றும் சிகரெட்களை குழாய்களுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.

சம்பவத்தன்றும் அவர்கள் குழாய்களுக்கு அருகில் புகைபிடித்துள்ளனர். பின்னர் எஞ்சிய சிகரெட்டின் பகுதிகளை அலட்சியமாக குழாய்களிற்குள் வீசியுள்ளனர். தீப்பெட்டிகளையும் குழாய்களுக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் சிகரெட்டிலிருந்து பரவிய தீ பரவி, பாரிய சேதம் ஏற்பட்டதாக பொலிசார் நம்புகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

Leave a Comment