58 வயதான உணவக உரிமையாளர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டது ஹனிட்ராப் திட்டம் என்பதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
தற்போது பொலிசாரின் பிடியிலுள்ள ஷிபிலி மற்றும் பர்ஹானா இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். சித்திக்கிடமிருந்து பணத்தை பெற இந்த திட்டத்தை வகுத்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (58). இவருக்கு சொந்தமான ஹோட்டல் கோழிக்கோடு எலத்திபாலம் அருகே உள்ளது. மே 18ஆம் திகதி திடீெரன சித்திக் மாயமானார்.
சித்திக்கை எங்கும் கண்டுபிடிக்க முடியாதால், சித்திக்கின் மகன், கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சித்திக் தொடர்பான விவரங்கள், ஆவணங்களை போலீசார் சோதனை செய்தபோது அவரது ஏ.டி.எம். கார்டு காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சித்திக்கின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்தனர். அதில் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து 1.5 இலட்சம் ரூபா பணம் எடுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சித்திக் பணத்திற்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகளி வனப்பகுதியில் பெரிய சூட்கேஸ்கள் இரண்டு திறந்து கிடந்தன. அதில் ஆண் ஒருவர் வெட்டப்பட்டு உடல் துண்டு துண்டாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் அகளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரின் விசாரணையில் சூட்கேசிலிருந்த உடல் பாகங்கள் ஹோட்டல் உரிமையாளர் சித்திக் உடையது என்பது தெரியவந்தது.
ஆனால் அவரை கொன்றது யார், என்ன காரணத்திற்காக கொன்றனர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து கோழிக்கோடு, அகளி, மலப்புரம் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சித்திக்கின் ஹோட்டலில் வேலை செய்து வந்த பாலக்காடு செற்புழச்சேரி நகரை சேர்ந்த ஷிபிலி (22) மற்றும் அவரது காதலி பர்ஹானா (18) ஆகியோர் மாயமானதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அவர்கள் 2 பேரும் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சித்திக்கை வெட்டி கொன்றதாகவும், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் போட்டுவிட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து பாலக்காடு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரையான விசாரணையின்படி, தொழிலதிபரை கடத்திச் சென்று பணம் பறிக்க திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
19 வயதான பர்ஹானாவுக்கும், 58 வயதான ஹொட்டத் உரிமையாளர் சித்திக்குக்குமிடையில் திருமணத்துக்கு அப்பாலான தவறான உறவு இருந்துள்ளது. சித்திக்கிடம் பேசி, அவரது ஹொட்டலிலேயே தனது காதலனுக்கு பர்ஹானா வேலை வாங்கிக் கொடுத்தார்.
என்றாலும், வேலையிடத்தில் ஷிபிலி பலத்த தகராற்றில் ஈடுபட்டுள்ளார். பர்ஹானாதான் தனக்கு வேலை பெற்றுத்தந்தார் என்பதை கணடறிந்த ஷிப்லி ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளார். சித்திக்கை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
ஹனி ட்ராப்பிங்கிற்காக சித்திக்கை ஹோட்டலுக்கு அழைத்து வருவது ஷிபிலியின் திட்டம்.
ஹோட்டல் அறைக்கு வந்த சித்திக்கிடம் ஆடைகளை களையுமாறு ஃபர்ஹானா சொன்னார், அதற்கு அவர் மறுத்தார். பின்னர் ஷிபிலி சித்திக்கின் தலை மற்றும் மார்பில் சுத்தியலால் அடித்தார். ஃபர்ஹானா ஷிபிலிக்கு சுத்தி கொடுத்தார். அவர்களின் பொதுவான நண்பரான ஆஷிக், சித்திக்கின் மார்பில் மிதித்தார். அந்த நபர் உயிரிழந்தார்.
பிறகுதான் மூவரும் உடல் உறுப்புகளை துண்டித்து, ஒரு சூட்கேசில் அடைக்க திட்டமிட்டனர். பின்னர் ஒரு கட்டர் மற்றும் தசூட்கேஸ் வாங்கப்பட்டது. உடல் பல பகுதிகளாக வெட்டப்பட்டு, அட்டப்பாடியில் உள்ள கொக்கி அருகே சூட்கேஸ் வீசப்பட்டது.
2018 இல் ஷிபிலி மீது ஃபர்ஹானாவும் அவரது குடும்பத்தினரும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர். அப்போது ஃபர்ஹானாவுக்கு 13 வயது. 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஷிபிலி 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு ஆலத்தூர் சப்-ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் இருவரும் நண்பர்களாகி, காதலர்களாகி விட்டனர்.