கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சசிகரன்.கின்சிகா என்ற சிறுமியே வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் சனிக்கிழமை (27) மாலை விழுந்துள்ளார்.
மாலை 3 மணி முதல் சிறுமியை காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தது கண்டறிப்பட்டது.
உடனடியாக சிறுமியை மீட்டு கொடிகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.




